1. வானரமாகிய வாரணம்..! (இந்த வாரம்)

அங்குசம்


தினமணி... உலகத் தமிழர்களின் உதடுகள் உச்சரிக்கும் இந்திய இதழியல் துறையின் ஓர் உன்னத பெயர்.

பதினான்கு மொழிகளை சரளமாக எழுத, பேசத் தெரிந்த ஜாம்பவான் திரு.ஏ.என்.சிவராமன், இந்திய குடிமைப் பணிகளின் மூத்த அதிகாரியும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளருமான திரு.ஐராவதம் மகாதேவன் போன்ற தமிழறிஞர்கள் ஆசிரியர்களாகக் கோலோச்சிய நாளிதழ் தினமணி. 

இவர்கள் தமிழறிஞர்கள் மட்டுமல்ல... நெஞ்சுரம் நிறைந்த நேர்மையாளர்கள் என்பதாலேயே தினமணியின் செய்திகளில் எப்போதும் நம்பகத்தன்மை பன்னெடுங்காலமாக நீடித்து வந்தது. 

இவர்களின் தலைமையில் இயங்கிய தினமணி, நம்பகம் வாய்ந்த ஒரு தேசிய நாளிதழாகத் திகழ்ந்தது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

அடுத்து வந்த ஆசிரியர் ராம.சம்பந்தன் தலைமையிலான் தினமணி தமிழகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாணியை பின்பற்றி வரவேற்பைப் பெற்றது. 

அதன் பின்னர் பொறுப்பாசிரியராகப் பதவியேற்ற எம்.சந்திரசேகரன் தலைமையிலான 
காலத்தில் பெரும் வளர்ச்சி இலலாவிட்டாலும் தரத்திலும் விற்பனையிலும் பெரும் இழப்பொன்றுமில்லை. 

இவரது காலகட்டத்தில் செய்திகளில் முன்பிருந்த ஆக்ரோஷம் இல்லை என்பது உண்மையென்றாலும் நேர்மைக¢கு குறையில்லை. 

கடுமை காட்டத் தெரியாத இவரது  தலைமையின்போது தினமணியின் அடுத்தடுத்த நிலையில் இருந்த கல்வி, அரசியல், மருத்துவம், விளையாட்டுத் துறைகளுக்குப் பொறுப்பாளர்களாக இருந்த சில மூத்த செய்தியாளர்கள் தடம் மாறி பத்திரிகை தர்மத்தை தாரை வார்த்து தங்களைச் செழிப்பாக்கிக் கொண்டனர். 

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற அபாய மணி அப்போதே அடிக்கத் தொடங்கிவிட்டது.

ஆம்... இதழியல் துறையில்  காலம் காலமாகக் கட்டிக் காத்து வந்த கண்ணியத்தைக் கட்டுப்பாடில்லாமல் காவு கொடுத்தே தீருவது என்ற கடமையுடன் களிறு ஒன்று தினமணியில் கால்பதித்தது.  

வெண்கலக் கடையில் வேழம் புகுந்தால்... 

அதிலும் தினமணி என்ற  கடவுள் விக்கிரகத்தைச்   சுமப்பதால்தான் தனக்கு மரியாதை என்ற உண்மையை உணராமல் மமதையில் மதம் பிடித்து புகுந்தால்... 

ஆரம்பத்தில்... அழகிய அணிகலன்களுடனும் ஆபரணங்களுடன் அலங்காரமாக அழகுறவும் சற்றே அமைதியாகவும் ஆடியசைந்து தினமணி கூடாரத்தில் புகுந்த இந்த வாரணம்...

அடுத்தடுத்த வாரங்களிலேயே தன்னுடைய இழி சகாக்களையும் இழுத்து வந்து வானரமாக மாறி வம்புகளை வளர்க்கத் தொடங்கியது... 

வானர வம்பு எனறாலே அதில் சுவாரஸ்யங்களுக்கும் அசுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமிருக்காதுதானே... 

(வம்புகள் வளரும்)
 

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)