3. வைத்தியின் அற்ப ஆட்டம்!

அங்குசம்

ஆக ஒருவழியாக தினமணி அலுவலகத்திற்குள் நுழைந்த நம்முடைய நாயகன் அடுத்தடுத்து தனது ஆட்டத்தைத் தொடங்கினார்... 

ஆட்டம் என்றால்... ஆட்டத்தில் பங்கேற்கும் எந்த சாராரும் வெற்றி, தோல்வி ஆகியவற்றை ஏற்கும் நேர்மையான ஆட்டம் அல்ல... 

விதிகளுக்கு உட்பட்டோ உடன்பட்டோ ஆடும் ஆட்டமும் அல்ல... அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அற்பமான ஆட்டம்...
 
பதவியில் அமர்ந்த சில நாட்களுக்குப் பிறகு திடீரென நம்முடைய நாயகன், நிருபர்கள் அனைவரும் தன்னைச் சந்திக்க வேண்டும் என உத்தரவி்ட்டார். 

சரி... புதிதாக வந்திருக்கிறார்... ஏதேனும் மாற்றங்களைச் செய்யலாம்... அது குறித்து நம்முடைய கருத்துகளைக் கேட்கலாம் என எண்ணி நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கூடினர். 

பகட்டாக வந்த பந்தா நாயகன், தினமணிக்கும் பத்திரிகை உலகத்துக்கும் இடையேயான தனது தொடர்புகளை சிலாகித்துப் பேசினார்... தினமணி தனது கனவுத் தொழிற்சாலை, தினமணி இல்லாதிருந்தால் தன்னுடைய அறிவு விசாலப்பட்டிருக்காது... 

ஆஹா, ஓஹோ, ... யாம் கண்ட பத்திரிகைகளில் தினமணி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற ரீதியில் பேசினார்.

நிருபர்களுக்கும் ஆஹா இவரைப் போன்றவரைத்தானே எதிர்பார்த்தோம் என்ற எண்ணம் தோன்றியது... 

பேச்சின் முடிவில் யதார்த்தமாகவோ அல்லது பதார்த்தமாகவோ நாயகன் சில விஷயங்களைக் கேட்டார்... 

அது ... அரசியல், போலீஸ், சினிமா, ஸ்போர்ட்ஸ், ரயில்வே, கார்ப்பரேசன், மெடிக்கல் உள்ளிட்ட பல துறைகளின் நிருபர்களிடம் அவர்கள் தங்களிடம் வைத்திருக்கும் தங்கள் துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் அதாவது அரசியல் தலைவர்கள், கல்வித் தந்தைகள், போலீஸ் உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், ரயில்வே உயர் அதிகாரிகள், முக்கியமான மருத்துவமனைகள், டாக்டர்கள் என அனைவரின் போன் நம்பர்கள் மற்றும் அவர்கள் குறித்த விபரங்களை தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். 

ஏனென்றால் தான் புதிய ஆசிரியர் என்பதை அவர்களுக்குத் தெரிவித்து அவர்களுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தினால் அது பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார்.

அவரது பேச்சில் இருந்த நேர்மை பலருக்கும் பிடித்திருந்ததால் தாங்கள் இதுவரை கஷ்டப்பட்டு பலரிடம் கெஞ்சியும் கொஞசியும் மிரட்டியும் பெற்ற மிக முக்கியமான தகவல்களை... குறிப்பாக, விவிஐபிகளின் போன் நம்பர்களை எந்தவித சந்தேகமும் இன்றி நாயகனிடம் கொடுத்தார்கள்... 

இதில் உள்ள பல முக்கியஸ்தர்களையும் அவர்களைப் பற்றிய விவரமும் நாயகனுக்கு ஏற்கனவே தெரியும்... . 

ஏனென்றால் அவரும் சாதாரணமானவர் அல்ல.. பத்திரிக்கையுலகில் பல காலம் இருந்தவர்... பல 'கவர்' - ஸ்டோரிகளைப் போட்டு பலரைக் 'கவர்'ந்த அனுபவம் அவருக்கு உண்டு... 

ஆனால் இடைக்காலத்தில் அவரைப் பலரும் உதாசீனப்படுத்த தனித்தனியே சில பத்திரிகைகள், கட்டுரைகள், நியூஸ் ஏஜென்ஸி, விளம்பரங்கள் வாங்கித் தருவது என பல்வேறு முன்பு சொன்னபடி புரோக்கர் மாமா வேலை உள்பட பல விஷயத்தையும் செய்திருக்கிறார். 

ஆனால் தினமணியில் பதவியேற்றபோது அவருடைய பல தொடர்புகள் அவரிடம் இல்லை. நான் இந்த இடத்தில் இவ்வளவு பெரிய பொஷிசனில் இருக்கிறேன் என்பதை தான் பழகிய 'பழைய'வர்களிடமும் 'புதியவர்'களிடமும் காண்பிக்க வேண்டும் என்பதற்காக பல தகவல்களைத் திரட்டினார்... இதில் தவறேதும் இல்லை.  

ஆனால் தான் பெற்ற தகவல்களை நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தினாரா என்பதுதான் கேள்வி... 

தான் பெற்ற தகவல்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட விஐபிகளிடம் பேசத் தொடங்கினார்.. நட்பை வளர்த்தார்... 

இருந்தாலும் அந்த விஐபிகள் சம்பந்தப்பட்ட நிருபர்களைத் தொடர்புகொண்டு நாயகன் பேசியது குறித்து தெரிவித்தனர். 

இவரைப் பற்றித் தெரிந்த சிலர் பழம் தின்று கொட்டை போட்ட சில மூத்த நிருபர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள் ஆகியோரிடம் சற்று உஷாராக இருக்குமாறும் 'ஐடியா' சொன்னார்கள்... 

பழம் தின்று கொட்டை போட்ட என்று சொல்லும்போதே அந்த பார்ட்டிகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்... 

அந்தத் திருடர்கள் நாயகனுக்கு ஜால்ரா போட ஆரம்பித்தனர்... அவர் என்ன செய்தாலும் இதை... இதைத்தான்... உங்களைப் போன்ற ஒருவரைத்தான் இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்தோம்.. என்று சூடேற்றினர். 

இந்த சூடேற்றம் என்ற வார்த்தையில் உள்ள பலப்பல விஷயங்களையும் அந்த ஆமாம் சாமிகள் கச்சிதமாகச் செய்தனர்.
 
நாயகன் யோசித்தார்... 

"இவ்வளவு அடிமைகளா நமக்கு... இதை வைத்து என்னவெல்லாமோ செய்யலாமே...!" 

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)