மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை கண்டித்து முஸ்லிம் ஜமா அத் சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி பேசும்போது,

“இந்தியா பல மதங்களைக்கொண்ட நாடு மட்டுமில்ல; பல்வேறு மதங்கள் பிறந்த இடமாகவும் திகழ்கிறது. பொது சிவில் சட் டத்தை அமல்படுத்தினால் நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் பன் முகத்தன்மை பாதிக்கப்படும். நாட்டில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், பொது சிவில் சட்டம் மட்டுமே முக்கியப் பிரச்சினையாக சொல்லப்படுகிறது” என்றார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி பேசும்போது,

“இந்தியாவில், தனிச் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் கிடையாது. 300-க்கும் மேற்பட்ட தனிச் சட்டங்களில் முஸ்லிம்களுக்கு 4 மட்டும்தான் உண்டு. பிற மதங்களுக்கும் தனிச் சட்டங்கள் உள்ளன. பொது சிவில் சட்டத்தால் அனைத்து மதத்தினரும் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

எஸ்டிபிஐ மாநிலச் செயலர் தெஹலான் பாகவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்டோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)