சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் 12 மாடி குடியிருப்பு உள்ளது. இது புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு ஆகும்.

இங்குள்ள 8-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஏர்கண்டி‌ஷனர் மாட்டும் பணி நடந்தது. இந்த பணியில் அரக்கோணத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தினகரன் (35), தினேஷ், சுரேஷ், பூபதி, பிரசாத் ஆகியோர் ஈடுபட்டனர்.

கட்டிடத்தின் வெளிப்புறம் சாரம் கட்டி பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென்று சாரம் சரிந்தது. இதனால் தொழிலாளர்கள் 5 பேரும் கீழே விழுந்தனர். இதில் தினகரன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

சுரேஷ், தினேஷ், பூபதி, பிரசாத் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)