காங்கயம் அருகே 15 ஆண்டுகளான 2 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சிவன்மலை கிரிவலப் பாதையில் திங்கள்கிழமை நடப்பட்டன.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காங்கேயம்பாளையத்தில் தனியார் இடத்தில் 15 ஆண்டுகளான அரச மரம், வேப்ப மரங்கள் இருந்தன. இந்த இடத்தில் கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அந்த இரண்டு மரங்களையும் வெட்டாமல் வேருடன் பிடுங்கி மற்றொரு இடத்தில் நட முடிவு செய்யப்பட்டது. இந்தப் பொறுப்பை காங்கயத்தில் இயங்கி வரும் "வேர்கள்' அமைப்பு ஏற்றுக் கொண்டது.

இதற்கான ஏற்பாடுகளை வேர்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் கே.வெங்கடேஷ், வி.சங்கரகோபால், முருகானந்தம், சண்முகம், சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 25 பேர் முன்னின்று செய்தனர்.

திங்கள்கிழமை மதியம் ஒரு மணி அளவில் இந்த 2 மரங்களும் 2 கிரேன்கள் உதவியுடன் வேருடன் பிடுங்கப்பட்டு 12 கி.மீ. தொலைவில் உள்ள சிவன்மலை கிரிவலப் பாதைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நடப்பட்டன. வேர்கள் அமைப்பினர் காங்கயம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15,000 மரக் கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகின்றனர்.

இந்த அமைப்பினர் 3 மாதங்களுக்கு முன், காங்கயம் காவலர் குடியிருப்பில் இருந்த மரத்தை வேருடன் பிடுங்கி சிவன்மலை கிரிவலப் பாதையில் நட்டு, அதைப் பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)