குழந்தையை நாய் கடித்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து. சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில் தடுக்கலாம்.

பூனை, குரங்கு, நரி, ஓநாய், வவ்வால் போன்றவை மூலமும் ரேபிஸ் பரவும். ரேபிஸ் உடலில் பரவி நரம்பு மண்டலத்தை தாக்கினால் அதன் பிறகு செய்வதற்கு ஒன்றுமில்லை. மரணம் நிச்சயம்

வெறிநாயின் எச்சிலிலும் ரேபிஸ் கிருமிகள் உண்டு. எனவே ஏற்கனவே காயம் இருந்து அதை நாய் நக்கினாலும் ரேபிஸ் பரவும். உணவு கட்டுப்பாடு ஏதும் கிடையாது.

குழந்தைகளை நாய் கடித்தால் முதலுதவி  செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது.

முதலுதவி :

நல்லா சோப் போட்டு கழுவ வேண்டியது ரொம்ப முக்கியம். கடித்த இடத்தில் ரேபிஸ் கிருமிகள் கோடிக்கணக்கில் இருக்கும். குறைந்தது 2 நிமிடங்கள் ஓடும் டேப் தண்ணீரில் கழுவவேண்டும். அதன் பின் ஆண்டிசெப்டிக் லோஷன் போட்டு கழுவலாம்.

கடி வாயை மூடக்கூடாது; தையல் போடக்கூடாது.  உடனே முதல் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும்.

கடியின் வகைகள் :

category I : நாயை தொடுதல், உணவு ஊட்டுதல், காயம் படாத தோலை நக்குதல்.

மருத்துவம் : தேவையில்லை

category II: சிராய்ப்பு காயம், கவ்வுதல், குறைவான அளவில் ரத்தக்கசிவு

மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி

category III: ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள், நரி, ஓநாய், வவ்வால் கடி

மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி+ இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து

ஊசிகள் :

1. டிடி ஊசி - இது எந்த விலங்கு கடித்தாலும் போடவேண்டியது.

2. ரேபிஸ் ஊசி - அரசு மருத்துவமனையில் இது இலவசமாக போடப்படும். தனியாரில் ரூ 350-500 வரை ஆகும்

3. இம்யுனொக்லொபின் - அதிகமான அளவில் உள்ள காயத்திற்கு கட்டாயம் போட வேண்டும். இதுவும் இலவசமாகக் கிடைக்கும்.

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)