ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆன்டி முர்ரே 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 5 முறை பட்டம் வென்ற ஜோகோவிச்சை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

உலகின் ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன் போட்டி லண்டனில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் உலகின் முதல்நிலை வீரரான ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து)- இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) மோதினார்கள்.

இதில் முர்ரே 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 5 முறை பட்டம் வென்ற ஜோகோவிச்சை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றி மூலம் அவர் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

ஜோகோவிச்சிடம் கடைசியாக ஜூன் 5-ந்தேதி பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டியில் முர்ரே தோற்றார். அதற்கு இன்றைய ஆட்டத்தில் சொந்த மண்ணில் முர்ரே பதிலடி கொடுத்தார். இந்த தோல்வியால் ஜோகோவிச்சால் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க இயலாமல் போனது.

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)