தஞ்சை மாவட்டம் பாபநாசம் கீழவீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). இவர் மாத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராணி (41). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கும்பகோணம் பிரம்மன் கோவில் பஜார் தெருவை சேர்ந்த அனந்தராமன் மனைவி பேபி (62) என்பவரிடம் இருந்து கனகராஜ் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை திருப்பி வாங்குவதற்காக பேபி கடந்த 17-ந் தேதி பாபநாசத்தில் உள்ள கனகராஜ் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த ராணியிடம், அவர் பணத்தை திருப்பி கேட்டார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராணி, பேபியை பிடித்து கீழே தள்ளினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயக்கமடைந்தார். பின்னர் ராணி மின்சார வயரால் பேபியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

அதன்பிறகு ராணி, பேபியின் உடலை வீட்டில் உள்ள ஒரு பெரிய மரப்பெட்டியில் வைத்து அதன் மீது பழைய பிளாஸ்டிக் பொருட்களை போட்டு மூடியுள்ளார். அந்த பெட்டியை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டினார். பின்னர் வீட்டையும் பூட்டிவிட்டு அருகே செட்டித்தெருவில் உள்ள மற்றொரு வீட்டுக்கு ராணி குடும்பத்துடன் சென்று விட்டார்.

பேபி வீட்டிற்கு வராததால் அவரது செல்போனிற்கு உறவினர்கள் தொடர்பு கொண்டனர். அப்போது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அவரது உறவினர்கள் ராணி வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு அவரது வீடு பூட்டி கிடந்துள்ளது. பேபியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்காததால், இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பேபியின் உறவினர்கள் நேற்று காலையில், கீழவீதியில் உள்ள கனகராஜ் வீட்டிற்கு மீண்டும் சென்றனர். அங்கிருந்த கனகராஜ் மற்றும் ராணியிடம் பேபி குறித்து கேட்டனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதுடன், வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது.

இதனால் சந்தேகம் அடைந்த பேபியின் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பெரிய மரப்பெட்டியில் கொலை செய்யப்பட்ட பேபியின் உடல் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்து கனகராஜும், ராணியும் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து கொலை நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பேபியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பேபியின் மருமகன் ராஜ் (42) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கனகராஜ், ராணியை கைது செய்தனர். பேபியின் கொலைக்கு ராணியின் கணவர் கனகராஜும் உடந்தையாக இருந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)