நடிகர் கலாபவன் மணியின் மரணத்துக்கும் தனக்கு எந்த வித சம்மந்தமுமில்லை என பிரபல நடிகை அஞ்சு அரவிந்த் கூறியுள்ளார்.

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் கலாபவன் மணி கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் உடலில் மெத்தனால் கலந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இத்தனை மாதங்கள் கழித்தும் அவர் மரணத்தில் உள்ள சந்தேகம் விலகவில்லை. அவர் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலிசார் திணறி வருகின்றனர்.

இது குறித்து சந்தேகத்தின் பேரில் போலிசார் பலரிடம் விசாரித்தனர். அதில் ஒருவர் அவருடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகை அஞ்சு அரவிந்த்.

கலாபவன் மணியின் கெஸ்ட் அவுசுக்கு அடிக்கடி சென்று அஞ்சு அவருடன் பேசுவார் என சொல்லப்பட்டது.

இந்த விடயம் குறித்து பேட்டி அளித்த அஞ்சு அரவிந்த்,

நானும் கலாபவன் மணியும் நல்ல நண்பர்கள். அவர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நான் தொகுத்து வழங்கியுள்ளேன்.

அது சம்மந்தமாக அவரை தான் அடிக்கடி சந்திப்பது வழக்கம் என்றும், கலாபவன் மணி மரணமடைந்த திகதியில் தான் அவரை சந்திக்கவேயில்லை என்றும் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)