தென்னிந்தியாவில் 10-வது நாளாக தொடரும் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகளின் விலை உயர தொடங்கியுள்ளது. லாரிகளின் வேலை நிறுத்தத்தின் காரணமாக காய்கறிகளின் விலையேற்றத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் தென்னிந்தியா முழுவதும் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர தொடங்கியுள்ளன. கர்நாடக மாநிலம் குல்பர்கா சந்தையில் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். 

காப்பீட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும், வேட் வரி உயர்வை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30-ம் தேதி முதல் தமிழகம், கர்நாடகம் உள்பட தென் மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இன்றுமுதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் தொடருமென்று அறிவிக்கப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விலை மேலும் உயருமென்று வியாபாரிகள் கூறியுள்ளனர். அதோடு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகமும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)