இலங்கை பறிமுதல் செய்த படகுகளை விடுவிப்பது, மீன் பிடிப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து கொலும்பில் நடைபெற்ற மீனவர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இலங்கை தலைநகர் கொலும்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள், இருநாட்டு மீன்வளத்துறை செயலாளர்கள் பங்கேற்றனர். அப்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ள படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும், மீன்பிடிப்பது தொடர்பாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் பேச்சுவார்ததையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்டமாக மீண்டும் கொலும்பில் பேச்சுவார்ததை நடைபெற உள்ளது. அப்போது இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் முடிந்தது தமிழக மீனவர்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் வருகிற 25ம் தேதி தமிழக மீனவர்களை ஒன்றுதிரட்டி கச்சத்தீவு சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர் சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)