நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, தேனி, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடக்கி உள்ளனர். பணிமனையில் அரசு பேருந்துகளை நிறுத்திவிட்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் சென்னையில் பல்லவன் சாலை பணிமனையில் பேருந்துகளை தொழிலாளர்கள் நிறுத்தனர். போக்குவரத்து கழக அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அரசு நாமம் போட்டுவிட்டதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக போக்குவரத்து கழக அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளருக்கு பணப்பலன் அரசு தரவில்லை என்பது தொழிலார்களின் குற்றச்சாட்டாகும். 

தொழிற்சங்கம் கேட்ட ரூ.7,000 கோடிக்குப் பதில் ரூ.1,250 கோடி தர அரசு முடிவு செய்தது. இதனை தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரியிருந்தன.

பல்வேறு கோரிக்கைகளை அரசு ஏற்காததால் நாளை முதல் வேலை நிறுத்தம் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த தகவல் கிடைத்ததும் பல்வேறு இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)