ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் பொதுமக்கள் 2ம் கட்டமாக கடந்த 12ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

35 நாட்களாக நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தை தொடக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் இப்போது கண்டுகொள்ளாமல் தவிர்க்கின்றன.

நேற்று முன்தினம் போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர்களும், பெண்களும் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு மீது மண்ணை வாரி தூற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 36வது நாளாக போராட்டம் நடக்கிறது. நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், ‘மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. நாங்கள் நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். மாநில அரசு எந்த நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. மாநில அரசு மறைமுகமாக ஆதரவளிக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையேல் இத்திட்டத்திற்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு நூதன போராட்டங்களை நடத்துவோம்’ என்றனர்.
 

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)