தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடப்பதாக கடந்த சில தேர்தல்களில் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்ததாக மாயாவதி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.

வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று குடியரசுத்தலைவரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் பாமக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.

பூர்வி எல் வோரா என்ற கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் உள்பட 31 கம்யூட்டர் சயின்ட்டிஸ்ட்டுகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்கள்.

ஆனால், வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று டெல்லி சட்டமன்றத்தில் நிரூபித்திருந்தார்.

இதையடுத்து, வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று கூறுகிறவர்கள் நாளை சனிக்கிழமை நிரூபித்துக் காட்டலாம் என்று தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த சோதனைக்கு பிறகு, இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும், உறுதிச் சீட்டு வழங்கும் வகையிலான வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)