தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி நாடு முழுவதும் அறியப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நாளை மறுநாள் 28 மாநிலங்களின் விவசாயிகள் கூட்டத்தில் பேசுகிறார்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்தல், காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் 14 முதல் ஏப்ரல் 23 வரை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை மறுதினம்(21ம் தேதி) நடக்கிறது.

இதில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து அய்யாக்கண்ணு தலைமையில் 15 பேர் திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று சென்னை சென்றனர்.

டெல்லி செல்லும் முன் தன்னை வந்து பார்க்கும்படி முதல்வர் கூறி இருந்தார். அதன்படி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று சென்னை, தலைமை செயலகம் வந்தனர்.

முதல்வர் சென்னையில் இல்லாததால் வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வருவாய்த்துறை செயலாளர் சந்தரமோகன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் அய்யாக்கண்ணு கூறுகையில், ‘முதல்வரை சந்திக்க சென்ற போது அவர் விமானத்தில் கோவை சென்றது தெரிய வந்தது. விவசாயிகளை அவர் ஏமாற்றி விட்டார்’ என்றார்.

இதன்பின் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம் உள்பட 28 மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் 300 பேர் கலந்து கொள்கின்றனர்.

இதில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் தொடர் அகிம்சை போராட்டம் நடத்தலாமா அல்லது 10 லட்சம் விவசாயிகளை திரட்டி பிரதமர் அலுவலகத்தை தினமும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாமா என முடிவு எடுக்கப்பட உள்ளது.

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)