பழைய 500 ரூபாய் நோட்டை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டுள்ள நிலையில் ஒடிசா இளைஞர் அதிலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை புரிந்துள்ளார்.

பழைய 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்துள்ள ஒடிசா இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது முதல் தற்போது வரை கருப்பு பணத்தை பதுக்கிய பலர், பழைய ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வதென்று அறியாமல் கிழித்து குப்பைத் தொட்டிகளில் எறிந்து வருகின்றனர். 

ரிசர்வ் வங்கியே பழைய நோட்டுக்களை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடி வருகிறது. 

ஆனால், ஒடிசாவின் நியாபடா மாவட்டத்தைச் சேர்ந்த லச்மன் டண்டி என்ற 17 வயது இளைஞர், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார். 

விவசாயி மகனான லச்மன், தானே பல்ப் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார். 

தனது ஆராய்ச்சி பற்றி லச்மன் கூறுகையில், செல்லாத ரூபாய் நோட்டை கிழித்து எறிந்தபோது, சூரிய ஒளியில், ரூபாய் நோட்டின் மீது இருந்த சிலிகான் பூச்சு இருப்பதை கண்டேன். 

அந்த சிலிகான் பூச்சில் எலக்ட்ரிக் வயரை இணைத்து, டிரான்ஸ்பார்மருடன் பொருத்தி, மின்சாரத்தை தயாரித்தேன். 

ஒரு 500 நோட்டில் இருந்து 5 வோல்ட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும். 

இதனை தயாரிக்க எனக்கு 15 நாட்கள் மட்டுமே ஆனது. இதனை முதலில் எனது கல்லூரியில் தான் செய்து காட்டினேன். 

அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் இதுகுறித்த பிரதமர் அலுவலகம் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதினேன். 

இந்த தகவலை அறிந்த பிரதமர் அலுவலகம், இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, அறிக்கையாக தயாரித்து அனுப்பும்படி ஒடிசா அரசுக்கு ஏப்ரல் 12-ம் தேதி கடிதம் அனுப்பியது. 

ஒடிசா அரசும் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தி, அறிக்கை தயாரித்து மே 17 அன்று பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. 

இத்தகவல் பரவ துவங்கியதை அடுத்து லச்மனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)