தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் ரசாயனம் கலந்திருப்பதால் புற்று நோய் வருகிறது. 

எனவே ஆவின் பாலை பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று பொது நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். 

அமைச்சராக இருந்துகொண்டு இப்படி பேசுவது சரியா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

தனியார் நிறுவனங்களின் பாலை குடிப்பது என்றால் பொதுமக்கள் யோசிக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி சொன்னதாக கூறினார். 

தனியார் நிறுவனங்கள் ரசாயனம் கலப்பது தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். 

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பால் பாக்கெட்டை வெளியில் எடுத்தால் ஐந்து மணி நேரத்தில் அது கெட்டுவிட வேண்டும். ஆவின் பால் மட்டுமே தரமாக தரப்படுகிறது.

போதுமான அளவு பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின்பாலை மட்டுமே பொதுமக்கள் வாங்க முடிவு செய்தால் பால்பவுடர் தயாரிப்பது நிறுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் ஒருபக்கம் ரொம்ப நல்லவர் போல பேசினாலும், அவருடைய பேச்சு தனியார் பால் நிறுவனங்களை அச்சுறுத்தவே என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)