இந்த மாதம் 9ம் தேதி ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அந்தத் தாக்குதலில் ராணுவ வாகனங்கள் சேதமடைந்தன. திடீரென்று ஒரு முஸ்லீம் இளைஞரை இழுத்து வந்த ராணுவ மேஜர் லீடுல் கோகோய் தனது ராணுவ வாகனத்தின் முன்புறம் கட்டினார். 

பின்னர் அந்த இளைஞருடன் கல்லெறிந்த மக்கள் கூட்டத்தின் முன் வாகனத்தை ஓட்டினார். கட்டிவைக்கப்பட்ட இளைஞர் மீது கல் பட்டுவிடும் என்று மக்கள் கல்லெறியத் தயங்கினார்கள். 

இதைப் பயன்படுத்தி ராணுவ மேஜர் அந்த இளைஞருடன் பல்வேறு வாக்குச் சாவடிகளை பார்வையிடச் சென்றார். 

இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்த ராணுவ மேஜர் மீது மனித உரிமை மீறல் புகார் எழுந்தது. 

அதைத் தொடர்ந்து அவர் மீது ராணுவ நீதிமன்றத்தின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 

இந்த விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் கலவரத்தை சிறந்த முறையில் சமாளித்தார் என்று மேஜர் லீடூல் கோகோய்க்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது. 

ராணுவ தளபதி ராவத்தின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ராணுவ வாகனத்தில் கட்டிவைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர் பரூக் அஹமது தர் ஆங்கில ஹிண்டு நாளிதழிக்கு அளித்த பேட்டியில் மேஜரின் நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது : மே 9ம் தேதி காலை நான் வாக்களித்துவிட்டு வெளியே வந்தேன். உடனே என்னை இழுத்துச் சென்ற மேஜர் ராணுவ வாகனத்தின் முன் கட்டிவைத்தார். 

நான் கல்லெறிந்ததாகக் கூறுவது தவறு. என்னை கல்லெறியும் கூட்டத்திலிருந்து தன்னை பாதுகாக்க மனிதக் கேடயமாக மேஜர் பயன்படுத்தினார். 

வாகனத்தில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் பல்வேறு கிராமங்களுக்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றார். 28 கிலோமீட்டர் என்னை மனிதக் கேடயமாக பயன்படுத்தினார். 

காலை 10.45 முதல் இரவு 7.30 வரை தண்ணீர் கூடக் கொடுக்காமல் வாகனத்தில் கட்டிவைத்தபடி பயணம் செய்தார். அவருக்கு பாராட்டுப் பத்திரம் கொடுப்பது அடக்குமுறையை ஆதரிப்பது போலாகும். 

ஒரு வழியாக எனது வழக்கை இந்திய ராணுவம் முடித்து வைத்திருக்கிறது என்றார் பரூக். 

இந்த நிகழ்வு குறித்து ஹூரியத் அமைப்பின் தலைவர் ஜீலானி கூறியதாவது :

பாஸிஸ மனப்பான்மை இந்தியாவில் வெகுவாக பரவிவிட்டது. காஷ்மீர் மக்களிடம் இந்த மனப்பான்மையுடன்தான் இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களை அணுகுகிறது. ராணுவ மேஜருக்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்திருப்பது விசாரணைகள் அனைத்தும் கண்துடைப்பு என்பதை வெளிப்படுத்துகிறது என்றார் ஜீலானி. 
 

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)