மாட்டிறைச்சி தடையை எதிர்த்து திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில் அவர் பேசியதாவது...

நாம் உண்ணும் உணவை  நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மோடி எதை விரும்புகிறாரோ அதைத் தான் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார் என்றால், அரசியல் சட்டம் நமக்கு வழங்கிய தனி உரிமை பாதிக்கப்படுவதாகத்தான் கருத முடிகிறது. தனி நபர் சுதந்திரம் பறிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

மத்திய அரசு மாட்டிறைச்சி சம்பந்தமாக சட்டம் போட முடியாது என்று கோர்ட்டு கூறியுள்ளது. மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதை தள்ளுபடி செய்துள்ளது. மாநில அரசுக்குத்தான் இதற்கான அதிகாரம் உள்ளது என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இப்போது மாட்டிறைச்சி சட்டம் போட்டு 8 நாளாகி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள நாம் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். பல மாநில முதல் - அமைச்சர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த செய்தியை முழுமையாக படித்து விட்டு தான் பதில் கூறுவேன் என்கிறார். அனைத்து அமைச்சர்களின் பதிலும் இதுவாகத்தான் உள்ளது.

கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா, புதுச்சேரி மாநில முதல்வர்கள் உடனே கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட தோழமை கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். இதையாவது எடப்பாடி பழனிசாமி படித்து பார்த்து இருப்பாரா? அவருக்கு வருமான வரி சோதனைதான் அடிக்கடி நினைவுக்கு வரும். சி.பி.ஐ. சோதனை மட்டும்தான் நினைவுக்கு வரும்.

மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை உணர்ந்து பார்த்து மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் மீண்டும் மெரினா புரட்சி தமிழ்நாட்டில் உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)