நடுங்குகிறது இதயம்..!

காதல் போர்வையால் இதயம் போர்த்தியவளே.. காதல் கடுங்குளிரில் நடுங்குகிறது இதயம்.. உயிர் குளிர் காய இதழ்களால் நீ முத்தத் தீ மூட்டுவாயா..?

...
கல்லில்லை என் இதயம்

நீ தரும் வலியினை பாசத்தால் மறக்கிறேன் பூவான என் இதயம் கடும் சொல்லைத் தாங்கல.. கல்லில்லை என் இதயம் வார்த்தைகளால் வதைக்காதே...!

...
ஈர்க்கும் காந்தப்புலம் உன் கண்களா..!

வடக்கு தெற்கு ஈர்க்கும் காந்தப்புலம் அவள் கண்கள்!   முகத்தைக் காட்டுபவளே முழுவதையும் காட்டேன்? வெண்ணிலா!   ரோஜாவின் அருகே முள் அவள் அண்ணனோ?   அவள் காந்தியைப்போல் அமைதியானவள் என்றேன் குஜராத்தில் பூகம்பம்!  

...
தீராக் காதல் இது...!

மழைநேரம் மண்வாசனையை எழுப்பிவிடுவதைப்போல் இரவுகளில் உன்னைப்பற்றிய கனவுகள் என் காதலை தட்டியெழுப்பி விடுகிறது...

...
தொடர்கிறாய் கவிதையாக...!

நீ பிரிந்ததால் நான் உன்னை தொலைக்கவில்லை நீ என்னுள் தொடர்கிறாய் கவிதையாக !!!!!  

...
மரணத்தின் வாயிலில்...!

நீ என்னோடு பேசாதிருக்கும் ஒவ்வொரு நொடியும் நான் மரணத்தின் வாயிலில் சென்று வருகிறேன்...  

...
ஞாபகம் இல்லையா ..?

நான் உன்னைத்    திங்கள் பார்த்த‌ போது நீ என்னைத்    திரும்பிப் பார்த்தாய்   நான் உன்னை     செவ்வாய் பார்த்த‌ போது நீ என்னைப் பார்த்து     செவி சாய்த்தாய்   நான் உன்னை       புதன் பார்த்த போது நீ என்னைப் பார்த்து       புன்னகை புரிந்தாய்   நான் உன்னை     வியாழன் பார்த்த‌ போது நீ என்னைப் பார்த்து      விழி அசைத்

...