எங்கள் உணவை நீங்கள் தீர்மானிக்க முடியாது... மோடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..

மாட்டிறைச்சி தடையை எதிர்த்து திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில் அவர் பேசியதாவது... நாம் உண்ணும் உணவை  நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மோடி எதை விரும்புகிறாரோ அதைத் தான் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார் என்றால், அரசியல் சட்டம் நமக்கு வழங்கிய தனி உரிமை பாதிக்கப்படுவதாகத்தான் கருத முடிகிறது.

...
விவசாயிகளை ஏமாற்றிய எடப்பாடி... தமிழக விவசாயி அய்யாக்கண்ணுவின் புதிய அவதாரம்... 28 மாநில விவசாயிகளுடன் டெல்லியில் போராட்டம்...

தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி நாடு முழுவதும் அறியப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நாளை மறுநாள் 28 மாநிலங்களின் விவசாயிகள் கூட்டத்தில் பேசுகிறார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்தல், காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் 14 முதல்

...
35 நாட்களாக தொடரும் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் தவிர்த்து ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்கம் தொலைக்காட்சிகள்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் பொதுமக்கள் 2ம் கட்டமாக கடந்த 12ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 35 நாட்களாக நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தை தொடக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் இப்போது கண்டுகொள்ளாமல் தவிர்க்கின்றன. நேற்று முன்தினம் போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர்களும்,

...
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்ட மீடியாக்கள்... மத்திய அரசுக்கு பயந்து போராடும் மக்களை புறக்கணித்தன...

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில்  அப்பகுதி பொதுமக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி துவக்கினர். நேற்று 32வது நாளாக நடந்த போராட்டத்தில் சிறுவர்கள், பொதுமக்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பதாகைகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்களத்திற்கு வந்த திரைப்பட இயக்குனர் கவுதமன

...
அரசு எங்களுக்கு நாமம் போட்டுவிட்டது... போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றச்சாட்டு...

நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, தேனி, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடக்கி உள்ளனர். பணிமனையில் அரசு பேருந்துகளை நிறுத்திவிட்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சென்னையில் பல்லவன் சாலை பணிமனையில் பேருந்துகளை தொழிலாளர்கள் நிறுத்தனர். போக்குவரத்து கழக அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியட

...
மீனவர் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை தோல்வி

இலங்கை பறிமுதல் செய்த படகுகளை விடுவிப்பது, மீன் பிடிப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து கொலும்பில் நடைபெற்ற மீனவர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இலங்கை தலைநகர் கொலும்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள், இருநாட்டு மீன்வளத்துறை செயலாளர்கள் பங்கேற்றனர். அப்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வை

...
லாரிகள் வேலைநிறுத்தத்தால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு!

தென்னிந்தியாவில் 10-வது நாளாக தொடரும் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகளின் விலை உயர தொடங்கியுள்ளது. லாரிகளின் வேலை நிறுத்தத்தின் காரணமாக காய்கறிகளின் விலையேற்றத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் தென்னிந்தியா முழுவதும் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர தொடங்கியுள்ளன. கர்நாடக மாநிலம் குல்பர்கா சந்தையில் வெங்காயம் மற்றும் தக்

...