நவம்பர் 21 : உலக ஹலோ தினம் இன்று..!

ஹலோ என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை உபயோகிப்பீர்கள் என்று எண்ணியதுண்டா? ஒருவரிடம் பேச்சுவழக்கில் ஹலோ சொல்பவர்கள் இருப்பார்கள் அல்லது பேஸ்புக் , வாட்ஸ் அப்பில் உரையாடிக்கொண்டிருக்கும்போது பிடிக்காத விடயம் ஏதேனும் வந்தால் எழுத்து வடிவில் ஹலோ சொல்வீர்கள். தெரிந்தவரிடம் ஹலோ சொல்வீர்கள், சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது உங்களுக்கு முன்னால் நடந

...
நவம்பர் 17 : அமெரிக்க உயிரி வேதியியலாளர் ஸ்டான்லி கோஹென் பிறந்த தினம் இன்று..1

மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்ற, அமெரிக்க உயிரி வேதியியலாளர் ஸ்டான்லி கோஹென் (Stanley Cohen) பிறந்த தினம் இன்று (நவம்பர் 17).  * அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் பிறந்தவர் (1922). ரஷ்ய யூதர்களான பெற்றோர் 1900-களில் அமெரிக்காவில் குடியேறினர். வருமானம் குறைவாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தனர். * சிறு வயதில் கோஹென் போலியோவால் பாதிக்கப்பட்டதால

...
நவம்பர் 10 : தமிழறிஞரும் படைப்பாளியுமான அ.ச.ஞானசம்பந்தன் பிறந்த தினம் இன்று!

சிறந்த தமிழறிஞரும் படைப்பாளியுமான அ.ச.ஞானசம்பந்தன் (A.Sa.Gnanasambanthan) பிறந்த தினம் இன்று (நவம்பர் 10).  * திருச்சி மாவட்டம் கல்லணையை அடுத்துள்ள அரசங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர் (1916). தமிழறி ஞரும் ஆன்மிக சொற்பொழிவாள ருமான தந்தை லால்குடி உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தான் சொற் பொழிவாற்றிய இடங்களுக்கு எல்லாம் மகனையும் அழைத்துச் செல்வார். இதனால் பல அறிஞ

...
நவம்பர் 09 : தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான் பிறந்த தினம் இன்று!

‘கவிக்கோ’ என்று போற்றப்படும் சிறந்த தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான் (Abdul Rahman) பிறந்தநாள் இன்று (நவம்பர் 9).  * மதுரை கீழ்ச்சந்தைப் பேட்டையில் (1937) பிறந்தவர். தந்தை உருதுக் கவிஞர். தாத்தா உருது, பாரசீக மொழிகளில் கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர். அதனால், இயல்பிலேயே இவரும் கவிதை எழுதும் திறன் கொண்டிருந்தார். * பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, இவருக்கு மேற்கொண்டு படிக்க விருப்ப

...
நவம்பர் 08 : ஆராய்ச்சியாளர் ஜாக் செயின்ட் கிளேர் கில்பி பிறந்த தினம் இன்று!

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மின்பொறியாளரும், ஆராய்ச்சியாளருமான ஜாக் செயின்ட் கிளேர் கில்பி (Jack St. Clair Kilby) பிறந்த தினம் இன்று (நவம்பர் 8).  * அமெரிக்காவின் மிஸோரி மாநிலம் ஜெபர்சன் நகரில் (1923) பிறந்தார். தந்தை மின் நிறுவனம் நடத்திவந்தார். இத னால், சிறுவயதிலேயே கில்பிக்கு எலெக்ட்ரானிக் சாதனங்கள் மேல் ஆர்வம் பிறந்தது. * கிரேட் பெண்ட் பள்ளியில் ஆரம்பக் கல்விக்குப் பிறகு, இலினாய்

...
நவம்பர் 06 : இயற்பியல் அறிஞர் பிரான்சுவா பாரோன் இங்லட் பிறந்த தினம் இன்று!

நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் பிரான்சுவா பாரோன் இங்லட் (Francois Baron Englert) பிறந்தநாள் இன்று (நவம்பர் 6).  * பெல்ஜியத்தில் (1932) பிறந்தார். தந்தை ஜவுளிக்கடை அதிபர். இரண்டாம் உலகப்போரின்போது, பெல்ஜியத்தில் ஜெர்மனி 1940-ல் ஊடுருவியதும், யூதப் படுகொலைகள் தொடங்கின. இவர் யூதர் என்பதை மறைத்து, பள்ளிக் கல்வி, இசைப் பயிற்சி ஆகியவற்றை ஒரு குடும்பம் இவருக்கு வழ

...
நவம்பர் 03 : அ.க.செட்டியார் பிறந்த தினம் இன்று..!

‘தமிழில் பயண இலக்கியம்’ என்ற புதிய இலக்கிய வகையின் முன்னோடியும் சிறந்த எழுத்தாளருமான அ.க.செட்டியார் (A.K.Chettiar) பிறந்த தினம் இன்று (நவம்பர் 3).  திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்தவர் (1911). இவரது இயற்பெயர் கருப்பன். திரு வண்ணாமலையில் நடுநிலைப் பள்ளிக் கல்வி வரை பயின்றார். சிறுவயது முதலே எழுதும் ஆர்வம் கொண்டிருந்தார். 17 வயதில் இவர் எழுதிய ‘சாரதாம்பாள் - சிறு தமாஷ

...