Home > சினிமா > தொலைகாட்சியில் நேரடியாக வெளியாகும் சுந்தர்.சி படம்

தொலைகாட்சியில் நேரடியாக வெளியாகும் சுந்தர்.சி படம்

கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் வெற்றியைப் பெற்றது.

2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதையை மையமாக கொண்ட படம் மாயா பஜார்

அதைத் தமிழில் எடுத்துக் கொண்டிருக்கிறார் சுந்தர்.சி. அவர் தயாரிக்க பத்ரி இயக்குகிறார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது படத்தை நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியிடவிருப்பதாக சொல்லப்படுகிறது.

நவம்பரில் வரவிருக்கும் தீபாவளி நாளில் இந்தப்படத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் புதிய படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்த சன் தொலைக்காட்சிக்கு கொரானாவால் கடந்த 5மாதங்கள் படங்கள் எதுவும் வெளியாகாததால் புதிய படங்கள் கிடைக்கவில்லை.

கிடைத்ததையும் திரையரங்குகளில் வெளியிடும் முன் ஒளிபரப்பவியலாது என்பதால் அவர்களே ஒரு புதிய படத்தைத் தயாரித்து வெளியிட தயாராகிவிட்டார்கள்.

You may also like
விஜய்சேதுபதியின் ரணசிங்கம் அக்டோபர் 2 ல் வெளியீடு
பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சினிமா தயாரிப்பாளர்கள் கண்டனம்
ஏவிஎம் தயாரிக்கும் இணையத் தொடர்
என்னோடு காதல் பாடல் வீடியோ | காசுரன்

Leave a Reply