Home > அறிவியல் > கனடா – Indian Scientists series – 3

மனிதனுக்கும், பிரபஞ்சத்திற்கும், அவற்றை உருவாக்கி யவருக்கும் என்ன தொடர்பு?
தத்துவஞானிகளையும் சிந்தனையாளர்களையும் எப்போதுமே ஈர்த்துவரும் கேள்வி இது.
கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் இந்திய தத்துவ ஞானிகள் பலர் ஈடுபட்டனர்.
அவர்களில் ஒருவர்தான் கனடா. இவருடைய வைசேசிகா சூத்திரங்கள் என்ற நூல் அறிவியல், தத்துவம், மதம் ஆகியவை கலந்ததாக இருக்கிறது.
அணுக் கோட்பாடுதான் இதன் உள்ளடக்கம். இவருடைய அணுக் கோட்பாடு, இவருக்கு பின்னால் வந்த தத்துவ ஞானிகள் கூறிய அணுக் கோட்பாடுகளைக் காட்டிலும் தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
பிரிக்க முடியாத ஒரு பொருளுக்கு பரமணு என்று இவர்தான் பெயர் சூட்டி இருக்கிறார். அணுவைத்தான் அவர் அப்படி பெயரிட்டுள்ளார்.
பரமணுதான் எல்லா பொருள்களையும் உருவாக்குகிறது. அணுவை யாராலும் பார்க்க முடியாது. உணரவும் முடியாது. அது தெய்வீகமானது. அழிக்க முடியாதது என்கிறார்.
நீர், நிலம், காற்று, தீ என்ற பல்வேறு பிரிவுகளுக்குள்ளும் பல்வேறுபட்ட அணுக்கள் இருக்கின்றன என்று அவர் கூறினார்.
ஒரே வகைப்பட்ட இரண்டு அணுக்கள் இணையும்போது, இரட்டை மூலக்கூறு உற்பத்தியாகிறது. அது அந்த இரண்டு பரமணுக்களின் உட்கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். பல்வகையைச் சேர்ந்த பரமணுக்களின் உட்கூறுகள் இணைந்தால் ஏராளமான எண்ணிக்கையில் பெருகும்.
ரசாயண மாற்றம் குறித்தும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். எந்த மாற்றத்துக்கும் வெப்பம்தான் காரணமாகிறது. பரமணுவின் உட்கூறும் சூடுபடுத்தினால் மாறும்.
மண்பானையை சூடுபடுத்தினால் கருப்பாகிறது. மாங்காயை தீயில் வாட்டினால் அது பழுக்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இதுபோல உருவானவைதான் என்கிறார் அவர்.

You may also like
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.
15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி

Leave a Reply