காதல் பூச்சி
விழிகள் தெளிவாக கொடுத்து விடுகிறது உன் மீதுள்ள என் காதலை நினைவைத் தூதனுப்பி உன் உலகுக்குள் ஐக்கியமாகிறேன் நான் மலரைச் சுற்றும் அந்த வண்ணாத்துப் பூச்சியாய் உன் காதலெனும் தேனைப் பருக வட்டமிடும் காதல்... Read More
தேவாமிர்தம்…
தேவலோகதேவர்களெல்லாம் என்மீதுகடுங்கோபத்தில் உள்ளனராம் தேவாமிர்தமானஉன்னை நான்கொள்ளைகொண்டுவிட்டதால்…
பூக்களுக்குள்வன்முறை…
மென்மைபூக்களுக்குள்ளும் வன்முறையாம்இன்று!!! பூவையாகிய… உன்கூந்தலில்யார் அமரப்போவதென்று…
எத்தனை முறை சொல்லுவது
எத்தனை முறை சொல்லுவதுபூ பறிக்க செல்லாதே என்றுஇப்போது பார்பூந்தோட்டமே வாடிவிட்டதுஉன் அழகு கண்டு நாணி..
துயில் கொள்ள
மேகமதை மெத்தையாக்கி தென்றலினை கீதமாக்கி என் நெஞ்சமதை தலையணையாய் தருவேனடி பூவையே நீ சிறு துயில் கொள்ள…!
தாலாட்டு
இதயத்தில் நீ உறங்க தருவேன் அதன் துடிப்பை தாலாட்டாக…