பூக்களுக்குள்வன்முறை…
மென்மைபூக்களுக்குள்ளும் வன்முறையாம்இன்று!!! பூவையாகிய… உன்கூந்தலில்யார் அமரப்போவதென்று…
எத்தனை முறை சொல்லுவது
எத்தனை முறை சொல்லுவதுபூ பறிக்க செல்லாதே என்றுஇப்போது பார்பூந்தோட்டமே வாடிவிட்டதுஉன் அழகு கண்டு நாணி..
துயில் கொள்ள
மேகமதை மெத்தையாக்கி தென்றலினை கீதமாக்கி என் நெஞ்சமதை தலையணையாய் தருவேனடி பூவையே நீ சிறு துயில் கொள்ள…!
தாலாட்டு
இதயத்தில் நீ உறங்க தருவேன் அதன் துடிப்பை தாலாட்டாக…
பேனா
உன் காதல் சொல்லஎனை ஏன் வதைக்கிறாய் தினமும்உயிர் நோக போராடிசோர்ந்து விட்டேன்இன்றாவது சொல்லிவிடுகாதலை அவளிடம்இப்படிக்கு,பேனா
நான் நேசிப்பது உன்னை
பகல் நேசிப்பது இரவை. மழை நேசிப்பது பூமியை. காதல் நேசிப்பது இதயத்தை. நான் நேசிப்பது உன்னை. நீ நேசிப்பது என்னை மட்டுமா இருக்க ஆசை கொள்கிறேன் என் அன்பே