இரவெல்லாம்

5 இரவெல்லாம் ஊர்சுற்றிவிட்டு வீடு திரும்பியிருக்கிறது பூனை இந்த நிலவுமட்டும் வாய்பேசுமென்றால் எங்கே போனாய் என்ற கேள்விக்கு பூனை சொன்ன மியாவை மொழிபெயர்த்துவிடலாம்! 6 தன் வீட்டு வாசலோரத்தை இந்த கூறுகெட்ட பூனை பொதுக்...
Read More

முத்தங்கள் ஊறும் கேணி

இளைப்பாற வந்திருக்கிறது ஒரு பறவை  பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய் எதுவும் கேட்காமலே  விசிறவிடத் தொடங்குகிறது மரம் கடந்துவந்த தொலைவை பறவையின் முகத்தில் பார்த்து  தன் கிளைகளில் கனிந்திருக்கும்  பழங்களைப் பரிமாறுகிறது பதிலுக்கு தன்...
Read More

நகாசு வேலைகள் செய்யப்பட்ட பொன்னணியைப் போல

தன் பிள்ளைகளிடமிருந்தோ கணவனிடமிருந்தோ அண்டை அயலிடமிருந்தோ  அவளுக்கு எப்படியும் வாய்த்துவிடுகிறதொரு துயரம் தன் துயரத்தை நகாசு வேலைகள் செய்யப்பட்ட  பொன்னணியைப் போல அவள் அணிந்திருக்கிறாள் தெரிந்தவர்கள் அறிமுகமானவர்கள் அனைவருக்கும்  அதை காட்டிக் காட்டி நிறைகிறாள் ...
Read More

ஒரு முழுப் பகலையும்

இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர் அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது! இந்தக் கோடை  வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல வந்தது என்றான்...
Read More

துயரத்தின் புதிய ரெசிபி!

ஆம், இன்று துயரத்தின் நாள்கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது சிம்மாசனத்தில்இதயமோ அதன்முன் மண்டியிட்டுவைரம்போல் சுடரும் கண்ணீர்த்துளிகளைகப்பம் கட்டிக்கொண்டிருக்கிறது சுண்டக்காய்ச்சிய துயரத்தை என் குவளையில்மீள மீள நிறைத்துக்கொண்டிருக்கிறதொரு பாடல்கால்கள் பின்னும் போதையிலும்அடுத்த குவளைக்கு நீள்கிறதென் கை துயரத்தின் அருங்காட்சியகத்துக்குஎவ்வளவு...
Read More

துயரத்தைச் சந்தித்தல்!

ஒரு துயரம்நம் வீட்டுப் படியேறும்போதுஎன்ன செய்வது? வாசலிலேயே ஆள்நிறுத்திவீ ட்டிலில்லை எனச் சொல்லலாம்ஏற்கெனவே வெளியூர் போய்விட்டதாகவும்ஊர்திரும்ப வெகுநாளாகும் எனலாம்‘உங்கள் சேதியைச் சொல்லுங்கள்வந்ததும் சொல்லிவிடுகிறேன்’என நைச்சியமாகக் கேட்டுப்பார்க்கலாம் கையிருப்புத் துயரங்களைக் காட்டலாம்இந்தப் பூஞ்சை உடல்- இனியும்துயரம்...
Read More