Category

அரசியல்

காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பு!

காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக உலகின் பல நாடுகள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இந்த பிரச்சனைகளை விவாதிக்கவும்...
Read More

நூறுநாள் வேலைத் திட்டத்தை மூடுகிறதா மோடி அரசு?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய திட்டமாக கருதப்பட்டது கிராமப்புற ஏழைகளுக்கு நூறு நாள் வேலை உத்தரவாத திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் பொருளாதார நிலை வேகமாக உயர்ந்தது....
Read More

மோடிக்கு காங்கிரஸ் அனுப்பிய குடியரசுதின பரிசு!

நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடும் போது, காஷ்மீரில் 70 லட்சம் மக்கள் வீட்டுச் சிறைக்குள் வைக்கப்பட்டிருப்பதையும், குடியரசு அந்தஸ்த்தையே பறிக்கும் பாஜகவின் குடியுரிமைச் சட்டத்தையும் பல்வேறு அறிஞர்களும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில்...
Read More

காண்டம்களை கண்டுபிடித்தவர்கள், காணாமல் போன மாணவரை கண்டுபிடிக்காதது ஏன்?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை பாஜக தலைவர்கள் பலவிதத்திலும் மோசமாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். பல்கலைக்கழகத்திற்கு 2 ஆயிரம் மதுப்பாட்டில்களும், 3 ஆயிரம் காண்டம்களும் கண்டுபிடித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். எப்படித்தான் கேலி பேசினாலும், கேவலப்படுத்தினாலும்,...
Read More

இந்திய பாஸ்போர்ட் மதிப்பும் வீழ்ச்சி 82 ஆவது இடத்திலிருந்து 84க்கு சென்றது!

2020 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 பாஸ்போர்ட்டுகளில் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 84 ஆவது இடம் கிடைத்துள்ளது. முதலிடம் ஜப்பான் பாஸ்போர்ட்டுக்கு கிடைத்திருக்கிறது. அந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தால், 191 நாடுகளுக்கும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருந்தால்...
Read More

மோடியின் டிஜிடல் இந்தியா தோலுரித்து கிண்டல் செய்யும் கொரியா டைம்ஸ் கார்ட்டூன்!

மோடி தலைமையிலான மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்துவிட்டு, கடந்த ஐந்து மாதங்களாக அங்கு மக்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. வெளியுலகத் தொடர்புகளை துண்டித்து, காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை...
Read More

துரோகம் செய்யவே நாடாளுமன்றம் வந்த அன்புமணி

சென்னை: நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார் என்று திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில்,  சென்னையில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி பங்கேற்றார். அப்போது, அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மிக முக்கியமான ஈழ தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது. ஓட்டுரிமை தொடங்கி அவர்களின் வாழும் உரிமைகளைப் பறிக்க அதிமுக துணை போயிருக்கிறது. நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை. ஒருநாள் கூட அவர் அவைக்கு வந்தது இல்லை. தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவர் அவைக்கு வர மாட்டார். எப்போதும் அவர் தலைமறைவாக இருந்தார்.  ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்தார். சரியாக அன்று அவைக்கு வந்து, மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். வேண்டும் என்றே அன்புமணி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார். நாம் வாக்களித்து அனுப்பிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்து இருந்தால் இந்த சட்டம் அமலாகி இருக்காது. ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர். குடியுரிமை சட்ட திருத்தம், நாட்டில் அனைவரும் சமம் என்று சொல்வதற்கு எதிரானது. மக்களை இது மொத்தமாக பிரிக்கிறது. உலக நாடுகள் இதனால் இந்தியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது என்றார்.