Home > சினிமா > ஒரே டயலாக்கில் விஜய் ரசிகர்களை கவர்ந்த ஆரி.. அப்படி என்ன தான் சொன்னார்?

ஒரே டயலாக்கில் விஜய் ரசிகர்களை கவர்ந்த ஆரி.. அப்படி என்ன தான் சொன்னார்?

எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் ஆரி நடித்துள்ள அலேகா படத்தின் டிரெய்லர் விஜய் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் அலேகா. பிக்பாஸ் பிரபலம ஆரி அர்ஜுனன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.

கடந்து போன காதல், தற்போதைய காதல் என முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் இடம்பெறும் ஒரு காட்சியில், போலீஸ் ஆரியை லத்தியால் அடித்து அவரது பெயரைச் சொல்லுமாறு கேட்கின்றனர்.

அப்போது விஜய் என்று கூறும் ஆரியிடம், முழு பெயரையும் சொல்லும்படி போலீஸ் கேட்க, ஜோசப் விஜய் என்று ஆரி கூறுகிறார்.

இதன் மூலம் அலேகா படத்தில் விஜய்யின் உண்மையான பெயரில் ஆரி நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

அலேகா படத்தின் டிரெய்லரைப் பார்த்த விஜய் ரசிகர்கள், இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply