Home > சினிமா > கவர்ச்சிக்கு மாறிய ஜல்லிக்கட்டுப் போராட்ட ஜூலி (படம்)

கவர்ச்சிக்கு மாறிய ஜல்லிக்கட்டுப் போராட்ட ஜூலி (படம்)

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலியின் கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

அந்தப் போட்டியில் நடைபெற்ற சில சர்ச்சைகளினால் இவருக்கு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பின.

பின்னர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும் இவர் கால் பதித்தார்.

இவரது நடிப்பில் தற்போது “பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஜூலி விதவிதமான போட்டோக்களை பதிவு செய்து வருவார். கடந்த வாரம் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்ட ஜூலி, தற்போது மார்டன் லுக்கில் சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply