தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. ஆரம்ப கட்டத்தில் கஷ்டப்பட்ட அவர் இப்போது பெரிய இடத்தை பிடித்துள்ளார்.
இவர் பிப்ரவரி 5ம் தேதி மஞ்சு பார்கவி என்பவரை மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
அவரது திருமணம் குறித்தும் கொஞ்சம் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. பின் மே மாதம் திருமண வரவேற்பு வைத்து பிரபலங்களை நேரில் சென்று அழைத்தார், கொரோனா காரணமாக திருமண வரவேற்பு நின்றது.
இந்த நிலையில் யோகி பாபுவிற்கும் மஞ்சுவிற்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை நடிகர் மனோ பாலா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை… மிகவும் மகிழ்ச்சி… தாயும் சேயும் நலம்…
— Manobala (@manobalam) December 28, 2020