தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று (22-11-2020) எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் பதவிக்கு டி ராஜேந்தர், ராமசாமி (எ) முரளி, பிஎல் தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர்.

துணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், செல்வகுமார் PT, சிங்காரவேலன், சிவசக்தி SD பாண்டியன் ஆர்கே சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்
நேற்று நடைபெற்ற தேர்தலில், மொத்தம் 1304 வாக்குகளில் 1050 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏ.வி.எம் சரவணன், எஸ்.பி சரண் உள்ளிட்ட சிலர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மூன்று அணிகளும் பல வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு வந்தது.

கருத்துக் கணிப்பில் ராமசாமி (எ) முரளி தான் அதிக வாக்குகளைப் பெறுவார் என்று தெரியவந்ததாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அது உறுதியாகியுள்ளது.
ராமசாமி முரளி பதிவான 1050 வாக்குகளில் 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டி ராஜேந்தர் 388 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். தேனப்பன் 67 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதேபோல் துணைத்தலைவர் பதவிக்கு முரளி அணியிலிருந்து ஆர் கே சுரேஷ்-ம் சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசனும் வெற்றி பெற்றுள்ளனர்.
கதிரேசன் 500 வாக்குகள் பெற்றுள்ளார். ஆர் கே சுரேஷ் 425 வாக்குகள் பெற்றுள்ளார். செல்வகுமார் PT 311 வாக்குகள் பெற்றுள்ளார். பாண்டியன் 279 வாக்குகள் மற்றும் வேலன் 200 வாக்குகள் பெற்றுள்ளனர்.