Home > சினிமா > முக்கிய இயக்குநர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி ஆலோசனை

முக்கிய இயக்குநர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி ஆலோசனை

நடிகர் விஜய் சேதுபதி தீவிர யோசனையில் உள்ளாராம்.

800 திரைப்படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி விஜய் சேதுபதி ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து வாழ்த்தை விட எதிர்ப்பே அதிகமாகவுள்ளது.

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து இருந்தாலும், தமிழர்களுக்கு அவர் துரோகம் புரிந்துள்ளார் என்றும் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார் என்றும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கலாமா வேண்டாமா என நடிகர் விஜய் சேதுபதி தீவிர யோசனையில் உள்ளாராம்.

இதனால் தனக்கு வேண்டிய முக்கிய இயக்குநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

800 திரைப்படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் சாதகமான முடிவையே விஜய் சேதுபதி எடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like
காதல் நண்பர் விக்னேஷ் சிவனுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா
விக்னேஷ் சிவன் – விஜய்சேதுபதி இணையும் படம் தொடக்கம்
இயக்குனரை அடித்த நடிகை விசித்ரா
படத்தின்புரமோஷனுக்கு ஒத்துழைக்காத அதுல்யாரவி!

Leave a Reply