Home > சினிமா > 22 வருடத்துக்குப் பிறகு இணையும் கமல்-பிரபுதேவா

22 வருடத்துக்குப் பிறகு இணையும் கமல்-பிரபுதேவா

விஜய்க்கு மாஸ்டர் இயக்கியதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம். இந்தப் படம் கமல்ஹாசனுக்கு 232 வது படம்.

விக்ரம் படத்துக்கான போஸ்டர், முன்னோட்ட வீடியோக்கள் சமீபத்தில் வெளியானதுஇந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்படியும் 2021 ஜனவரியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் கமலுடன் பிரபுதேவா இணைந்து நடிக்க இருக்கிறார். கமலும் பிரபுதேவாவும் 1998ல் வெளியான காதலா காதலா படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். அதன்பின்22 வருடத்துக்குப் பிறகு மீண்டும் கமலுடன் மிக முக்கியமான கேரக்டரில் பிரபுதேவா நடிக்கவுள்ளார்.

அனிருத் படத்துக்கு இசையமைப்பது மட்டுமே தற்போது உறுதியாகியுள்ள நிலையில் ஏனைய நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவிலேயே அறிவிப்பு வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தை எப்படியும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ரிலீஸ் செய்துவிடும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply