Home > சினிமா > பாகுபலி பிரபாஸ்சுடன் இணையும் அதர்வா

பாகுபலி பிரபாஸ்சுடன் இணையும் அதர்வா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகுபலி’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மிகப் பிரமாண்டமாக இந்தப் படம் தயாராகவுள்ளது.

மேலும், மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்த நிலையில், பிரபாஸுக்குத் தம்பியாக நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அதர்வா ஏற்கனவே தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘கத்தலகொண்டா கணேஷ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

You may also like
பிரபாஸ்20 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply