Home > சினிமா > ’அண்ணாத்த’ ஷீட்டிங் நிறுத்தம்! சன் பிக்சர்ஸ் முடிவு

’அண்ணாத்த’ ஷீட்டிங் நிறுத்தம்! சன் பிக்சர்ஸ் முடிவு

அண்ணாத்த படத்தை சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டும் என்ற முடிவில்தான் இறங்கினார் ரஜினி. ஆனால், கொரோனா காலத்தினால் ஐந்து மாதங்களுக்கு மேலாக ஷீட்டிங் நடத்த முடியாமல் போய்விட்டது.

தற்போது, நிபந்தனைகளுடன் ஷீட்டிங் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால், அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது சன் பிக்சர்ஸ்.

ரஜினியும் இந்த ஷீட்டிங்கில் கலந்துகொள்ள தயாராக இருந்தார். ஆனால், திடீரென்று ஷீட்டிங்கை நிறுத்திவிட்டது சன்பிக்சர்ஸ்.

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படத்திற்காக போடப்பட்டுள்ள செட்டில் ரஜினியும் நாளை கலந்துகொள்ள இருந்த நிலையில், சன்பிக்சர்ஸ் ஏன் இந்த முடிவை எடுத்தது? என்று விசாரித்தபோது, ‘’படப்பிடிப்பில் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், எடுக்க விருந்த அண்ணாத்த படக்காட்சியில் 200 முதல் 300 பேருக்கு மேல் பங்கேற்க இருக்கிறார்கள்.

அனுமதியை மீறி படப்பிடிப்பு நடத்தினால் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டியாகிவிடும், சர்ச்சைகள் உண்டாகும் என்பதால் தான் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளது சன்பிக்சர்ஸ்’’ என்கிறார்கள்.

You may also like
ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
சட்டத்தை கடைபிடிக்காமல் கேளம்பாக்கம் போனாரா ரஜினிகாந்த்
கந்தசஷ்டி கவசம் – காலங்கடந்து மௌனம் கலைத்த ரஜினிகாந்த்
ரஜினி குடும்பம் இ-பாஸ் வாங்கினார்களா?

Leave a Reply