Home > சினிமா > ரஜினி பிறந்தநாள் பரிசாக அண்ணாத்தே முதல் பார்வை?

ரஜினி பிறந்தநாள் பரிசாக அண்ணாத்தே முதல் பார்வை?

ரஜினி நடிப்பில் இந்த வருட துவக்கத்தில் வெளியானது தர்பார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். முந்தைய படங்களான பேட்ட, காலா படங்கள் கொடுத்த அளவுக்கு தர்பார் வெற்றியைப் பெறவில்லை 

ரஜினி நடிப்பில் அடுத்ததாகத் தயாராகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிவருகிறது.

அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களைக் இயக்கியவர்தற்பொழுது ரஜினியை இயக்கிவருகிறார்.

படத்துக்கான இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விரைவிலேயே துவங்க இருக்கிறது. இந்நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் 65 படத்தின் அறிவிப்பு வெளியானது. விஜய் படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார் என்பதே அந்த அறிவிப்பு.

தொடர்ந்து, ரஜினி ரசிகர்களுக்கும் அப்டேட் கொடுக்க இருக்கிறதாம் சன்பிக்சர்ஸ்.

நாளை ரஜினியின் பிறந்த தினம். தமிழின் உச்ச நடிகர் இவர் . ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாமல் எப்படி? படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அதற்கான பணிகள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

விஜய் ரசிகர்களைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை சன்பிக்சர்ஸ் பொய்யாக்காது என்றே சொல்கிறார்கள். ரஜினியின் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறதா என்பது எப்படியும் நாளை தெரிந்துவிடும்.

You may also like
ரஜினிகாந்த் 15 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டம்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
ரஜினிகாந்த் பிறந்த நாள்- நள்ளிரவில் ரசிகர்கள் கொண்டாட்டம்

Leave a Reply