Home > சினிமா > கட்டளையே சாசனம் பிரபாஸ் அதிரடி

கட்டளையே சாசனம் பிரபாஸ் அதிரடி

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்கள். இவ்விரு படங்களினால் , இந்திய அளவில் பிரபலமானதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிகரமான கதாநாயகன் ஆனார் பிரபாஸ்.

பாகுபலி படத்தின் வெற்றிக்குபின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படம் பெரிய பட்ஜெட் படம் தான். இந்திய மொழிகளில் வெளியாகி  வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் பிரபாஸ் கைவசம் தற்போது நான்கு படங்கள் இருக்கிறது.

பிரபாஸின் 20வது படத்தை சாஹோ படத் தயாரிப்பாளர் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்க, ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். ராதே ஸ்யாம் எனும் இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு நம்ம ஊர் ஜெஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரபாஸின் 21வது படத்தை கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி இயக்குநர் நாக் அஸ்வின் இயக்குகிறார்.

தெலுங்கின் பாரம்பரியமான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.பிரபாஸின் 22வது படத்தை ஓம் ராவத் இயக்குகிறார்.

ஆதி புருஷ் எனும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சனோன் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

பிரபாஸின் 23வது படம் சலார். கே.ஜி.எஃப் பட தயாரிப்பாளர் தயாரிக்க, கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஒரு தெலுங்கு நடிகையை நாயகியாக நடிக்க வைக்க பேசினார்களாம்.

தெலுங்கு நடிகை நடித்தால் தென்னிந்திய சினிமாவாக மாறிவிடும். என்னுடைய மார்கெட்டுக்கு இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை தான் நடிக்க வேண்டும், என்னுடைய இந்திய ஸ்டார் எனும் இமேஜ் குறைந்துவிடக்கூடாது என கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறார் பிரபாஸ்.

அதனால், திஷா பதானி உள்ளிட்ட சில இந்தி நடிகைகளிடம் பேச்சுவார்த்தையும் போய்க்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, பிரபாஸ் அடுத்தடுத்து நடிக்கும் நான்கு படங்களிலுமே தலா100 கோடி சம்பளம் பெறுவதாகவும் தகவல். தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் இளம் நடிகர் இவர்.

சொல்லப்போனால், பிரபாஸின் அடுத்த நான்கு படங்களுக்குமான ஒட்டுமொத்த பட்ஜெட் எப்படியும் சுமார் 1000 கோடி இருக்கும் என்கிறார்கள்.

எந்த படமென்றாலும் சரி, பிரம்மாண்டத்தில் குறை வைத்துவிடாதீர்கள் என்று தெளிவாகச் சொல்லியும் விடுகிறாராம் பிரபாஸ்.

கட்டளையே சாசனம் என்றுபாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனம் பிரபலமானது அதனை தனது திரையுலக வாழ்க்கையில் நிஜமாக்கி வருகிறார் பிரபாஸ்

You may also like
பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் சலார்
பாகுபலி பிரபாஸ்சுடன் இணையும் அதர்வா
பிரம்மாண்ட பாகுபலி ராணாவுக்கு எளிமையான திருமணம்
பிரபாஸ்20 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply