Home > சினிமா > சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது…

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது…

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்தன.. சித்ரா கொலை செய்யப்பட்டார் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.

இருப்பினும் அவர் தற்கொலைதான் செய்துகொண்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சித்ராவும், ஹேம்நாத்தும் பதிவுத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

சித்ரா படப்பிடிப்பில் இருந்தபோது, ஹேம்நாத் குடித்துவிட்டு அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சித்ராவின் தாயாரும் ஹேம்நாத்தை விட்டுப் பிரிந்து வரும்படி அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இதனால், ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சித்ராவின் மரணத்துக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாய் விஜயா உட்பட பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிதயாக, விசாரணையில் இருந்த கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் நேற்று (14.12.20) இரவு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply