Home > சினிமா > “எனக்கு கல்யாணமா?” – டென்ஷனாகும் நடிகை!

“எனக்கு கல்யாணமா?” – டென்ஷனாகும் நடிகை!

பொதுவாக எந்த மொழி சினிமா ஹீரோயினாக இருந்தாலும் சரி, அவர்களின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது, பத்திரிகைகயாளர்கள் யாராவது, “ஏங்க உங்களுக்கு எப்பங்க கல்யாணம்” எனக் கேட்டால் போதும் கடுகடுப்பாகிவிடுவார்கள். கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டியிருக்கு” என்பார்கள்.

ஒரு சில ஹீரோயின்களோ இம்சை அரசர்களின் தேவையில்லாத அழைப்பை கட் பண்ணுவதற்காகவே பாய்ஃப்ரண்ட் ஒருவரை செட் பண்ணி வைத்துக் கொள்வார்கள். ( அந்த வரிசையில நயன் தாரா—விக்னேஷ் சிவனை சேர்த்துப்புடாதீக. அவுக லவ்வு வேற லெவல் )

‘காதலி விழுந்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குஸ் எண்ட்ரியானவர் சுனைனா. அதன் பின் ‘நீர்ப்பறவை’, ‘வம்சம்’, ‘சில்லுக்கருப்பட்டி’ என நான்கைந்து படங்களில் நடித்தார். பார்ப்பதற்கு லட்சணமா இருந்தாலும் அவரால் மார்க்கெட்டை ஸ்டெடி பண்ண முடியல, தமிழ் சினிமாவிலும் ஆளப்பார்க்க முடியல.

இதனால் ஆந்திர தொழிலதிபர் ஒருவரை சுனைனா கல்யாணம் பண்ணிக் கொண்டதாக வழக்கம் போல் செய்தி கிளம்பியது. இதப்பத்தி எதுவுமே பேசாமல் இருந்த சுனைனா இப்ப லேட்டஸ்டா சொன்னது இது தான்.

“லாக்—டவுனுக்குப் பிறகு ரிலீசான ‘ட்ரிப்’ங்கிற த்ரில்லர் படம் எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துச்சு. அதுக்கடுத்து ‘ராஜ ராஜ சோரா’ங்கிற தெலுங்குப் படத்துல நடிச்சுக்கிட்டிருக்கேன். தமிழில் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் படத்துல பேசிக்கிட்டிருக்கேன். டைரக்டர்ஸ் பலபேர் என்னை மனசுல வச்சுக்கிட்டு கதை எழுதி வரும் செய்தியால் ஐ ஆம் வெரி ஹேப்பி.

இந்த நேரம் பார்த்து எனக்கு கல்யாணம்னு வதந்தி கிளம்புவதை நினைத்தா சங்கட்டமா இருக்கு. இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளும் திட்டம் எதுவுமில்லை. அதனால் நான் என்ன சொல்ல வர்றேன்னா, என்னோட கல்யாணம் பத்தி பேசுறத விட்டுட்டு சினிமாவப் பத்தி மட்டும் பேசுங்க” என்கிறார்.

பேசிட்டாப் போச்சு.

-சீமராஜா

You may also like
கோலிவுட்டில் புதுசு!
இந்த வார ஃப்ரெஷ் போட்டோ ஷூட்
ரஜினி மகளின் வேண்டுகோள்!

Leave a Reply