Home > சினிமா > அண்ணாத்த படப்பிடிப்பு குழுவில் எட்டுபேருக்கு கொரானா – படப்பிடிப்பு நிறுத்தம்

அண்ணாத்த படப்பிடிப்பு குழுவில் எட்டுபேருக்கு கொரானா – படப்பிடிப்பு நிறுத்தம்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்சிவா இயக்கத்தில் ரஜினி காந்த்நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முன்பு படத்துக்கான 40% படப்பிடிப்பு முடிந்திருந்தது. அதன்பிறகு, தற்பொழுது படப்பிடிப்பு துவங்கியது.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துவந்தது.

தேர்தல் நெருங்கும் காரணத்தினால் படப்பிடிப்பை விரைவில் முடித்திடத் திட்டமிட்டு, வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவந்தது.

ஒவ்வொரு நாளும் 14 மணிநேரம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவந்தார் ரஜினி.இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது.

ஷூட்டிங்கில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை வழக்கமாக எடுக்கப்படும். அப்படி, படப்பிடிப்பிலிருந்தவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

அண்ணாத்த ஒட்டுமொத்த படக்குழுவும் சென்னை திரும்புவதாகத் தகவல். படப்பிடிப்பிலிருந்த எட்டு பேருக்கு கொரோனா இருப்பது மட்டுமல்லாமல், ரஜினிக்கும் உடல்நலமில்லாத காரணத்தாலும் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தமுடியாத சூழல் என்றும் சொல்கிறார்கள்.

கூடுதலாக, ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply