Home > சினிமா > இந்த காம்போ பாத்து எவ்ளோ நாள் ஆச்சு…

இந்த காம்போ பாத்து எவ்ளோ நாள் ஆச்சு…

அனிருத்

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த ‘3’ திரைப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதற்கு முன்னரே ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் உலகளவில் பிரபலம் ஆகிவிட்டார் அனிருத். பின்னர் கோலிவுட்டில் பல படங்களுக்கு இசையமைத்த அனிருத், தனுஷின் பேவரைட் இசையமைப்பாளராக இருந்து வந்தார்.

தனுஷின் வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத், பின்னர் தனுஷ் படங்களுக்கு பணியாற்றவில்லை.

இருவருக்குமிடையே சிறு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகக் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

தற்போது தனுஷின் 44 வது படத்தை இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மித்ரன் ஜவகர் ஏற்கனவே தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்-அனிருத் கூட்டணியின் இசை மற்றும் பாடல்கள் எப்போதுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அதே போல தற்போது தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக வெளியாகியுள்ள தகவல் இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

தனுஷ் மித்ரன் ஜவகர் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனராம். ஹன்சிகா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

You may also like
வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்
செல்வராகவன்-சந்தானம் இணையும் மன்னவன் வந்தானடி
தனுஷ் ரசிகர்மன்ற விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்
பாரதிராஜாவுக்கு உயரிய விருது வழங்ககோரி 36 கலைஞர்கள் கடிதம்

Leave a Reply