Home > சினிமா > கபிலனை பெருமைப்படுத்திய இயக்குனர் பா.ரஞ்சித்

கபிலனை பெருமைப்படுத்திய இயக்குனர் பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. காலா ரிலீஸாகி இரண்டு வருடங்கள் கழித்து இந்தப் படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, ஆர்யாவுக்கு இது 30வது படம். குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் ஆர்யாவின் பெயர் கபிலன்.

ரஞ்சித் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலீஸ் செய்யும் போது, “ இங்க வாய்ப்புன்றது நமக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா” என்று குறிப்பிட்டிருந்தார்.

சொல்லப்போனால், ரஞ்சித் இயக்கத்தில் வெளியான எல்லாப் படங்களிலுமே பாடலாசிரியர் கபிலன் தான் பாடல் எழுதியிருக்கிறார்.

இந்தப் படத்துக்கும் கபிலனே வரிகள். இந்தப் படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால், கொரோனா காலமென்பதால், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் பாடல்களை உருவாக்கியிருக்கிறார் கபிலன்.

கபிலனுக்கு செய்யும் மரியாதையாக பா.ரஞ்சித் இவ்வாறு செய்திருக்கிறார். கபிலன் என நாயகன் பெயர் வந்திருப்பது அவருக்கே பெரிய ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. நெகிழ்ந்தும் போய்விட்டாராம் கபிலன்.

கபாலியில் ‘வானம் பார்த்தேன்’ என வரிகளில் ரசிகர்களை உருக வைத்தவர் கபிலன். இப்போது, சார்பட்டாவிலும் பெரிய அளவுக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like
வட சென்னை வாழ்வியலை கூறும் சார்பட்டா பரம்பரை
பிபிசியின் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்களில் கானா இசைவாணி! – BBC 100 Women 2020 – Casteless Collective

Leave a Reply