Home > சினிமா > நள்ளிரவில் விஷ்ணு விஷால் நடத்திய நிச்சயதார்த்தம்

நள்ளிரவில் விஷ்ணு விஷால் நடத்திய நிச்சயதார்த்தம்

இந்திய பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை மணக்கிறார் விஷ்ணு விஷால். இதற்கான நிச்சயத்தார்த்தம் 6.9.2020 நள்ளிரவு நடந்துள்ளது. வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

சினிமாவுக்கு வந்த பத்து வருடங்களில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். 2010-ம் ஆண்டு நீண்ட காலத் தோழியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மூன்று வயது மகன் இருக்கிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த பிரிவுக்குப் பிறகு டிப்ரஷன், ஆல்கஹால் அடிக்‌ஷன் எனப் பாதை மாறிய விஷ்ணு விஷால் தொடர் உடற்பயிற்சிகள் மூலம் அதில் இருந்து மீண்டார்.

கடந்த சில காலமாகவே விஷ்ணு விஷாலும் இந்திய பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதை வைத்து, இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்ற தகவல் வந்தது.

அப்போது விஷ்ணுவிடம் கேட்டபோது, “நல்ல ஃப்ரெண்ட்ஷிப்பும், புரிதலும் எங்களுக்குள்ள இருக்கு. ஆனா, இந்த ரிலேஷன்ஷிப் எவ்வளவு தூரம் போகுதுன்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்” என்றார்.

இந்த நிலையில் செப்டம்பர் 7ஜூவாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘New Beginnings’ என்ற கேப்ஷனில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் விஷ்ணு.

இது குறித்து பேசியுள்ள அவர், “ஆம். நேற்று இரவு எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஏற்கெனவே இருவரும் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று பேசியிருந்தோம்.

ஜுவாலாவுடைய பிறந்தநாளுக்கு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டுமென நினைத்து நள்ளிரவில் சந்தித்து மோதிரம் அணிவித்தேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். கொரோனா எல்லாம் முடிந்தவுடன் எங்களின் திருமணம் இருக்கும்.

இருவரும் அவரவருடைய கரியருக்கு உறுதுணையாக இருந்து வாழ்க்கை நடத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார்.ஜூவாலா கட்டா சர்வதேச பேட்மிட்டன் போட்டிகளில் பங்கேற்க தொடங்கியதுமே, 22 வயதிலேயே திருமணம் முடித்தவர்.

கடந்த 2005-ம் ஆண்டு பேட்மிட்டன் வீரர் சேத்தன் ஆனந்துடன் இவருக்குத் திருமணம் நடந்தது. ஆனால், இவர்கள் இருவரும் 2010-ல் கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

Leave a Reply