Home > சினிமா > நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து!

நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து!

அன்னபூர்ணா ஸ்டுடியோ

நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணாநகரில் அமைந்துள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 7 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தின் தாக்கம் வெகு தூரம் வரை காணப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் தீயணைப்பு வண்டிகள் உடனே அங்கு விரைந்துள்ளன.

அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் உயிரிழப்புகளோ அல்லது பொருள் சேதங்களோ இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மொத்தமாக தீ அணைத்து முடிக்கப்பட்டவுடன் இழப்புகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்டுகிறது.

ஹைதராபாத்தின் மிகப்பெரிய சினிமா ஸ்டுடியோஸ் அன்னபூர்ணா தான். ஒவ்வொரு நாளும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் அந்த ஸ்டுடியோவில் பரபரப்பாக நடந்து வரும்.

அதனால் அங்கு எப்போதும் திருவிழா காட்சியளிக்கும். தற்போது லாக்டவுன் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் சற்று குறைவாகவே இருந்துள்ளது.

Leave a Reply