Home > சினிமா > இயக்குனர்களை அவமானப்படுத்தும் ஹரிஷ் கல்யாண்

இயக்குனர்களை அவமானப்படுத்தும் ஹரிஷ் கல்யாண்

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்குக் காரணம், அந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாது நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கும் படம் என்கிறார்கள்.

அதனால்தான் சந்தானம் நடிக்க மறுத்தார் என்று சொல்லப்படுகிறது.
இப்போது சந்தானத்துக்குப் பதிலாக ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இதற்கிடையே, சந்தானம் இல்லையென்றானதும் அந்தக் கதையில் நடிகர் ஹரீஷ் கல்யாணை வைத்து இயக்கலாம் என்றெண்ணி அவரை அணுகினாராம் இயக்குநர் எம்.ராஜேஷ். ஆனால், இயக்குநர் எம்.ராஜேஷை மிகவும் அலட்சியமாக நடத்தினாராம் ஹரீஷ்கல்யாண்.

இப்போது என் சம்பளம் மற்றும் என்னுடைய இமேஜ் வேற லெவலில் இருக்கிறது. ஒடிடியில் வெளியாகும் படத்திலெல்லாம் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

வேண்டாம் என்று சொல்வது அவருடைய உரிமை ஆனால் அதைச் சொல்கிற விதம் மிகவும் தவறாக இருக்கிறது என்று சொல்லி இயக்குநர் ராஜேஷ் மிகவும் வேதனை அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஹரீஷ்கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான தாராளபிரபு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் ஹரிஷ்கல்யாணின் நடவடிக்கைகள் மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சில படங்களின் இயக்குநர்களிடம், என்னைப் பழைய மாதிரி நினைத்துக் கொள்ளாதீர்கள், என் ரேஞ்சே வேற, அதற்குத் தகுந்தாற்போல் காட்சிகள் இருக்கவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் அவரை வைத்துப் படம் இயக்கும்இயக்குநர்கள் மிகவும் நொந்துபோயிருக்கிறார்களாம். 

Leave a Reply