Home > சினிமா > செப்டம்பர் முதல் தியேட்டர்கள் திறக்கப்படுமா?

செப்டம்பர் முதல் தியேட்டர்கள் திறக்கப்படுமா?

கொரானா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் தமிழக அரசு சொல்லும் விதிமுறைகளையும் பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறி வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என உறுதி செய்யப்படாத அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு திறக்கப்படும்போது என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. தியேட்டரில் அரசு அனுமதித்துள்ள மொத்த இருக்கை எண்ணிக்கையில் 40 சதவீத இருக்கைகான டிக்கட்டுகள் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.

தினசரிமூன்று காட்சிகள் படங்களை திரையிடஅனுமதி ‌ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் ஒன்றரை மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். அதற்குள் அனைத்து இருக்கைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.

ஆன்லைன் வழியாக மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் பார்வையாளர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே திரையரங்கிற்குள் படம் பார்க்க அனுமதிக்க வேண்டும். முகக் கவசம் அணிவது கட்டாயம்.

இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசு தரப்பில் விரைவில் வெளியிடப்படும்என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like
தமிழ் பட தயாரிப்பு – விநியோகத்தில் நயன்தாரா
கல்லா கட்டாத விமலின்கன்னி ராசி
சினிமா படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கேட்கும் லாபம் படக்குழு
மிஷ்கினை அதிர வைத்த திரையரங்கு உரிமையாளர்

Leave a Reply