Home > சினிமா > ஏவிஎம் தயாரிக்கும் இணையத் தொடர்

ஏவிஎம் தயாரிக்கும் இணையத் தொடர்

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட நிறுவனம் ஏவிஎம். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது.

2011 ஆம் ஆண்டு விதார்த் நடித்த முதல் இடம் எனும் திரைப்படத்தைத் தயாரித்திருந்தது. அதன்பின் 2014 இல் இதுவும் கடந்து போகும் எனும் படத்தைத் தயாரித்து நேரடியாக யூடியூபில் வெளியிட்டது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கவிருக்கிறது.

ஆனால் திரைப்படம் தயாரிக்காமல் திரைப்படங்களுக்கு இணையாக ஓர் இணையதளத் தொடரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஏவிஎம்மின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த அருணாகுகன் மற்றும் அபர்ணாகுகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிப்பைக் கவனிக்கவிருக்கின்றனர்.

அந்த இணையதளத் தொடரை தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இயக்கவிருக்கிறார்.

படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
எல்லாவற்றையும் இறுதி செய்து அக்டோபர் மத்தியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

You may also like
அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி
திருடா திருடி படத்தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம்!
தமிழகத்தில் தியேட்டர்களுக்கான தடை தொடரும்- தமிழக அரசு
கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி மாற்றம்

Leave a Reply