Home > சினிமா > அக்ஷரா ஹாசனின் பாடலைப் பகிர்ந்து காந்தி நினைவைப் போற்றிய கமல்ஹாசன்!

அக்ஷரா ஹாசனின் பாடலைப் பகிர்ந்து காந்தி நினைவைப் போற்றிய கமல்ஹாசன்!

இன்று அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தை அடுத்து நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் பலரும் காந்தியின் நினைவைப் போற்றி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது மகள், நடிகை அக்ஷராஹாசன் குழந்தையாக இருந்தபோது பாடிய பாடல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் அக்ஷரா தேசபக்தி பாடலான சாரே ஜஹான் சே அச்சாவைப் பாடியிருந்தார்.

திரு மோகன்தாஸ் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அக்ஷராஹாசன் குழந்தையாக இருந்தபோது எனக்காக பாடியதைப் பகிர்ந்திருக்கிறேன்.

அவரின் முழு வாழ்க்கையையும் நமக்குப் பாடமாக சொல்லிவிட்டுச் சென்ற அந்த உயர் மனிதரின் மகத்துவம் போற்ற அனைத்து இந்தியர்களையும் அழைக்கிறேன்.

சமத்துவம் நிலவும் ஒரு இடமாக இந்தியாவை உருவாக்குவோம்-சரே ஜஹான் சே ஆச்சா, காந்தியின் இந்தியா இன்னும் நம்முடையதாக இருக்கலாம்!” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் “பாருக்குள்ளே நல்ல நாடுதான்… நம்பியதில் பிசகில்லை. நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால், நாளைய குழந்தைகளேனும் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டும். ஜெய்ஹிந்த்!” என்றும் தெரிவித்துள்ளார்.

You may also like
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா?
நடிகர் கமல்ஹாசன்
மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்
அக்‌ஷ்ராவின் புதிய பட ஃபர்ட்ஸ்லுக் ரிலீஸ்
புரட்டாசிக்கு பயந்த லோகேஷ் கனகராஜ் கமல் நடிக்கும் புதிய படம்

Leave a Reply