Home > சினிமா > சுல்தான் படப்பிடிப்பு நிறைவடைந்தது…

சுல்தான் படப்பிடிப்பு நிறைவடைந்தது…

நடிகர் கார்த்தி தான் நடித்து வரும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தான்னா நடிப்பில் ‘சுல்தான்’ படம் உருவாகி வருகிறது. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, விவேக் -மெர்வின் இசையமைக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ படத்தில் நடித்து வந்த போதே ‘சுல்தான்’ படத்திலும் கார்த்தி கவனம் செலுத்தி வந்துள்ளார்.

sultan

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன் திருச்சி பகுதியில் நடந்தது. . பின்னர் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற வேண்டிய நிலையில் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

பின்னர் சில தினங்களுக்கு முன்பு சுல்தான் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருவதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் படப்பிடிப்பு முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்தப் படம் குறித்து பதிவிட்டுள்ள கார்த்தி “படப்பிடிப்பு நிறைவடைந்தது !! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படம் குறித்து நாங்கள் கேட்ட நாள் முதல் இன்று வரை, இந்தக் கதை தொடர்ந்து எங்களை உற்சாகப்படுத்துகிறது.

இந்தப் படம் நான் நடித்த படங்களில் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாகும். இந்தப் படத்திற்காக முழக்கமிட்டு, தங்களின் சிறந்த உழைப்பை வழங்கிய முழு குழுவிற்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>And it’s a wrap!! From the day we heard the idea three years back till today, the story continues to excite us. It’s one of my biggest productions so far. I thank the entire team for slogging it through and giving their best. <a href=”https://twitter.com/hashtag/Sulthan?src=hash&ref_src=twsrc%5Etfw”>#Sulthan</a> <a href=”https://t.co/MUAinSYy4T”>pic.twitter.com/MUAinSYy4T</a></p>— Actor Karthi (@Karthi_Offl) <a href=”https://twitter.com/Karthi_Offl/status/1314075568577470464?ref_src=twsrc%5Etfw”>October 8, 2020</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

You may also like
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இலங்கையில்
கார்த்தியுடன் இணையும் கொம்பன் முத்தைய்யா
இடம் மாறும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு
படப்பிடிப்புக்கு குஜராத்துக்கு போக தயாராகும் சுந்தர் சி

Leave a Reply